இயற்கையின் அழகு

எத்துனை அழகு உன்னுள்ளே
தேடத் தேட ஆச்சர்யங்கள்

உதயமாகும் வெய்யோனைக்
காண விழிக்கும் கடலும்

கண்விழிக்க நமக்குதவும்
காக்கையுடன் சேவலொடு,

வானம்பாடியுடன்
சிட்டுக் குருவியின்
சிறகடிக்கும் சத்தமும் ,

கண்ணைக் கவரும்
வண்ணப் பறவைகளின்
கான இசை கேட்க்க
துயில் முறிக்கும் கானகமும்

ஐந்நிலத்தை ஆங்காங்கே
அருமையையாய் அமைத்தும்

நாம் குளிக்கும் அருவி அதும்
குளிக்கின்றது மழையினில்

அது மட்டுமா ,
மெழுகால் ஆன தேன் கோட்டையும்
மரத்தினில் ஆடும் தொங்கும் கூட்டையும்
மேற்கோளாக சொல்கின்றன
இயற்கையின் வியப்பென்று

நட்சத்திரங்கள் புடை சூழ
வானில் வரவேற்கும்
நிலவொளியும்

வரும் விடியல் என
வான் மதிக்கு விட்டுகொடுத்த
ஆதவனும் அற்புதங்கள்

இயற்கையின் அழகு
கடலினும் பெரிது , முடிந்தால் காண
வாருங்கள் என் கண்களில் காணொளியாக ...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-14, 8:35 pm)
Tanglish : iyarkaiyin alagu
பார்வை : 91

மேலே