இளநிலை மாற்றம்
இளநிலை மாற்றம்
திருச்சி திருச்சி, சீட் இருக்கு வா மா பொய்யான அவசரத்தில் கண்டக்டர் கூவிக்கொண்டிருக்க,
சார் எப்போ சார் வண்டி எடுப்பீங்க 5 நிமிஷம்னு சொன்னீங்க 1/2 மணி நேரமாச்சு இன்னும் எடுத்தப்பாடில்ல கோவமும் அவசரமும் கலந்த குரலில் பாலு!!!
. யோவ் உன் இஷ்டத்துகெல்லாம் வண்டி எடுக்கமுடியாது அவ்ளோ அவசரமா இருந்தா கார் வெச்சுக்கோ!!!
சார் நீங்க பேசறது சரி இல்ல.
இஷ்டம்னா உட்காரு இல்லேன்னா கிளம்பிட்டே இரு, திருச்சியா சார் சீட் இருக்கு உள்ள வாங்க சார்
. பாலு எல்லோர்டயும் ஏன் வம்புக்கு போற, இப்போ நீ உட்ட்கார போறியா இல்லையா பயத்தோடு சரண்யா ....
இரு மா ... பாலு இப்போ நீ உட்காருலன்னா நான் நடந்தே போறேன் போ!!!
. ச்சே என்று முற்று பெறாத வருத்ததோடு அமர்ந்தான் பாலு.
3 வருடத்திற்கு முன்
ஹலோ ஒன் மினிட் இங்க பஸ்ட் இயர் பி காம் எங்க இருக்கு தயக்கமான குரலில் ஒருவன் கேட்க ,
ஓ பஸ்ட் இயரா??? பேரென்ன அதட்டலாக ஜூலி .
என் பேரு முருகன் .
அப்டியா, மயில வீட்லயே பார்க் பண்ணிட்டு வந்துட்டியா ???
சரி அத விடு
முருகன்னு சொல்ற அதனால முத்தை தரு பத்தி திருநகை சாங்க பாடிட்டு கிளம்பு.
தெரியாது கா,
தெரியாதா ???
அப்டினா சட்டை இல்லாம க்ரௌண்ட 3 ரவுண்டு சுத்திட்டு வா, கிளம்பு !!.. போ டா...!!!
அக்கா ப்ளீஸ் கா ..
ஹே போடான்ர ...
தம்பி நேரா போய் லெப்ட்ல திரும்பு 1st ரூம் தான் பீ காம் மிரட்டல் குரலில் பாலு.
தேங்க்ஸ் நா.
இதோ பாருடி ஹீரோ!!!!
ஹே உனக்கு என்ன மனசுல பெரிய இவ நு நினைப்பா. ஒரு அப்பாவிய புடிச்சு வம்பிளுதிட்டுருக்க.!!
இது என் காலேஜ் இங்க நான் வைக்கறது தான் சட்டம் .
அப்டியே அரஞ்சென்னா செவுள் திரும்பிக்கும் .
வேணா என் கிட்ட வம்பு வெச்சுக்காத ....
, ஹே போ டி!!!!
இருவரின் பாதையும் வெவ்வேறானது .
வழக்கம் போல் சலசலப்புடன் வகுப்பில் பாடமும் நடந்து கொண்டிருந்தது
பிரின்சிபால் உள்ளே நுழைந்தார் வகுப்பறை அமைதியில் சூழ்ந்தது, பாலு ஜூலிய கிரௌண்ட்ல வெச்சு அசிங்க படுதுனியா ??? சார் என்ன நடந்ததுனா முடிப்பதற்குள் உன்ன 5 நாள் சுச்பெண்ட் பண்றேன். நான் சொல்றத மொதல்ல கேளுங்க ப்ளீஸ் ...
நமட்டு சிரிப்போடு நிற்கும் ஜூலியை முறைத்துவிட்டு, சார் நீங்க கொடுத்த தண்டனை 5ஆவது மாடி அளவுக்கு பெருசு நான் பண்ண தப்பு கிரௌண்ட் ப்ளோர் அளவுக்கு சின்னது 2 யும் பாலன்ஸ் பண்ணிக்கட்டுமா..
குழப்பத்துடன் பிரின்சிபால் புரீலையே ??? பாலு அடித்ததில் ஜூலியின் கன்னம் சிவந்தது.
வரேன் சார்.
நாட்கள் கழிந்தது பாலுவிடம் சரண்யா ஆமா உனக்கு பொண்ணுங்களே பிடிக்காதா, அப்டிலா ஒன்னும் இல்லையே…
பிரியா வும் நானும் நல்ல பிரண்ட்ஸ் அத பாத்துமா இந்த கேள்வி கேட்கற . அவ உன் க்ளோஸ் ப்ரெண்ட் கௌதமோட லவர் அதனால பேசற மத்த எந்த பொண்ணுகிட்டேயும் பேசி பாத்ததில்ல அதான் கேட்டேன்.
ஆமா நேத்து என்ன மனோஜ் கூட சண்ட போட்டுட்டு இருந்த ???
ஆமா பிரியா கிட்ட வம்பு பன்னினான் அதான், ஏன் எல்லோர்கிட்டயும் வம்பு வெச்சுக்கற.
அப்டி இல்ல நான் ஹீரோ அகரதுக்காக ஏதும் பன்னல.. தப்புன்னு தெரிஞ்சா கேட்பேன் அவ்ளோதான். ஹ்ம்ம் உன் கிட்ட எனக்கு பிடிச்சதே அதான்,,,
அப்புறம் அது மட்டுமில்ல, மெல்லிய குரலில் சரண்யா உன்ன பிடிச்சதே அதனால தான் சோ-----------!!!,
சோ ???
ஐ லவ் யு .
எனக்கு சந்தோசம் தான் பட்,
ஹேய் எனக்கு கமிட்மென்ட் இப்போ வேணாம் ப்ளீஸ்.
ஒன்னு அவசரம் இல்ல யோசிச்சு சொல்லு,
இன்று!!!
என்ன பிளாஷ் பேக்கா.... ஹ்ம்ம் ஆமா,,, என் கிட்ட பிடிச்சதே என்னோட இந்த தைரியம்தான்னு சொன்ன ஆனா இபோ சத்தமா பேச கூட விட மாற்ற வருத்தத்தில் பாலு கேட்க..
நமக்கு ஒரு குழந்தை இருக்கு ஞாபகம் இருக்கா இல்லையா என்றால் சரண்யா...
அப்போ ஒரு ஆம்பள ஆம்பளையா இருக்கறதுக்கு ஒரு குழந்தை பிறக்க வரைக்கும் தான் டைம் இல்லையா ????
நான் உன்ன கோலையாக்கர முயற்சில இருக்கேன்னு நினச்சாலும் சரி என்னோட லவ் இன்னும் குறையலன்னு நினச்சாலும் சரி, நீ கோவப்ப்படும்போது உன்னோட கைய என் கை தடுத்துட்டே தான்டா இருக்கும்...
ஹேய் சும்மா சும்மாலா ஐ லவ் யு னு சொல்ல முடியாது போடா என்ற செல்ல சிணுங்களில் சரண்யா தூங்க ஆரமித்தாள்,
பாலுவின் நிம்மதிப்பயணம் பெருமூச்சோடு தொடர்ந்தது...,