இருளை உமிழும் தீபங்கள் 0 தாரகை0

கூட்டைக் கலைக்கும் குயில்கூட்டம்-சில
குடும்பத்தில் நுழைந்த மருமக்கள்

சூட்டைக் கிளப்பும் குளிர்நிலவு -அழகு
பெண்களைக் காண்பதால் வரும்விளைவு

வெப்பம் கக்கும் பனிமலைகள் -பெற்ற
பிள்ளையால் வதைபடும் பெற்றோர்கள்

மண்ணை அரிக்கும் மரக்கூட்டம்-நம்
மக்களை ஆளும் தலைவர்கள்

விண்ணைக் கெடுக்கும் விண்மீன்கள் -மென்
பெண்மையின் இழுக்கு விலைமாது

இருளை உமிழும் தீபங்கள்-கருப்
பொருளை விளக்கா கவிதைகள்

கரியைப் பூசும் ஒப்பனைகள்-பொய்
கருத்தும் புள்ளியும் உதாரணம்.

எழுதியவர் : தாரகை (1-Feb-14, 12:42 pm)
பார்வை : 168

மேலே