வாருங்கள் தோழர்களே

அழகானபடைப்புகளும், ஆரோக்யமான விவாதங்களும் நடைபெற்ற களம் நம் எழுத்துதளம். இது இறந்தகாலமாவதை ஏற்க முடியாமல் இதை எழுதினேன். சில காலமாக தளத்தில் நடக்கும் செயல்கள் ஏற்புடையதாக இல்லை.
படைப்புகளின் கருத்துப்பகுதில் சொற்போர் நிகழ்வதும், படைப்புகளே அதுபோல் அமைவதும் வேதனையாக உள்ளது.
படைப்பாளிகளின் கையில் உள்ள ஆயதம் கூரானது என்பார்கள். அதை தவறாக பயன்படுத்தினால் அனைவரையும் காயப்படுத்தும், படைப்பவர் உட்பட.
உங்களின் இந்தசெயல்பாடு தமிழரின் செயலாகவே பார்க்கப்படும். மட்டமான வார்த்தைகள் நம் தரத்தை குறைக்கும் அன்றோ?.
பல குழந்தைகள்(நான் உட்பட ) நடை பழகும் தளத்தில் பயிற்றுவிப்பவரே முற்களை எறியலாமா?
தளத்தின் மூவகையானவர்களுக்கும் மூவகை வேண்டுகோள்:
1)பொழுதுபோக்குக்காக மட்டும் இதை பயன்படுத்தும் நண்பர்களே, உங்களுக்காக முகப்புத்தகம் உள்ளதே. இது அழிந்து கொண்டிருக்கும் நம் மொழியையும், நம் அடையாளங்களையும் காப்பற்ற முயலும் தளம்.உங்களின் விளையாட்டுகளும், வீண் சொற்களும் மொழியின்அழிவை தீவீரப்படுத்தும். தவிர பெண்களை சிறுமைப்படுத்துவதும், தோழர்களை கேவலப்படுத்துவதும் நம் இனத்தில் இல்லாத செயலன்றோ..இங்கு உங்களில் இருக்கும்உண்மை தமிழனை மட்டும் வெளிப்படுத்துங்கள்..

2)காயம்பட்ட தோழர்களே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆறாத வடுக்களை நம் தமிழுக்காக பொறுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நாள் தோறும் தமிழுக்கு வேடமிட்டு அழகு பார்க்கும் கலைஞர்கள் அன்றோ. வீணான விளம்பரங்களுக்கு நீங்களே வழி ஏற்படுத்திக்கொடுப்பதேனோ?. பொறுத்திருந்து பூமியை ஆளுங்கள் தோழமைகளே..

3)எல்லாவற்றையும் வேடிக்கைபார்க்கும் என் போன்றவர்களே, அமைதி கூட சில நேரங்களில் அழிவை ஏற்படுத்தும். கடமையை செய்வோம் பலனை எதிர்பாராமல்...

அனைவருக்குமான பொதுவான வேண்டுகோள்:

இன்னும் தமிழ்ப்படுத்தாத எத்தனையோ வார்த்தைகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு உங்கள் அறிவு தேவை.
பணத்தையோ அல்லது உடல் உழைப்பையோ தர எத்தனயோ படைப்பாளிகள் இருக்கிறோம். அவர்களை ஒருங்கிணைத்து மரம் நடலாம். படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவலாம்.
எழுதுவதோடு நில்லாமல் அதை செயல்படுத்தவும் செய்தால் நம் தமிழினம் உண்மையான படைப்பாளிகளை கொண்டதாக விளங்குமன்றோ...
கரம் சேர்ப்போம் வாருங்கள் தோழர்களே..
(முகம் காணாதவர்களை அம்மா, அப்பா, தோழர் என அழைக்கும் உரிமை பெற்றிருக்கிறோம். அதை இழந்து போக விரும்பாமல் இதை எழுதினேன்.பிழையிருப்பின் மன்னிக்கவும்.)

எழுதியவர் : செல்வா பாரதி (1-Feb-14, 4:02 pm)
பார்வை : 167

சிறந்த கட்டுரைகள்

மேலே