வரதட்சணை

தானமாய் பெண்ணைத் தந்து
தட்சணையாய் பொன்னைத் தந்து
வசதியாய் நான் வாழ
வட்டிக்கு பணம் வாங்கி
இன்பமாய் நான் வாழ
இருந்த வீட்டை விற்று
சுகமாய் நான் வாழ
சோறு போட்ட நிலத்தை விற்ற
என் தந்தை கடன்காரன்
வரிசை...வரிசையாய் செய்வதற்கே
வரிசை என்ற பெயர் வேறு...
பெண்ணை பெற்றதால்
பெரிதும் துன்பப்படும்
என் தந்தை பெரும் பாவி
மகனைப் பெற்றதால்
மகிழ்வோடு கணக்குப் போடும்
மாமியாரோ அப்பாவி
கணவனும் தெய்வமும் ஒன்றுதானாம்
ஓ.. இரண்டிற்குமே
தட்சனை கொடுத்து தானே தரிசனம்...