எழுத்து காம்

*காகித பூக்களாய் காலம் கடத்திய
எனக்கு வாசனை வரம் தந்து ..

*கவலை என்னும் தூசு படர்த்த
மனமதனை சீர்படுத்தி ஒளியாக்கி ....

*கேட்டதையெல்லாம் அள்ளித்தரும் அதிசய
பாத்திரமாகி ....
*கடலில் மூழ்கும் ஒருவனுக்கு கட்டை
கிடைத்தது போல்....

*அமுதாகிய தமிழதனை அங்கங்கு சுமந்து
கொண்டு கருத்தூட்டும் கரங்களினால்
என்னை நோக்கி .......

*நுழை என்று அழைத்தது
எழுத்து. காம்

*ஏன் இந்த மரியாதை என்னை பார்த்து
கேட்டாள்.....

*அலையாமல் திரியாமல்
நோகாமல் வேகாமல்
இருந்த என் இடத்திலே
ஆயிரம் கவிங்கர்களை
எனக்கு காட்டிய உனக்கு
முதல் வணக்கம் .

*என் இனிய நண்பர்களே
இதோ என் சின்னசிறு
உணர்வுகளை சிறு உளறலாக
சமர்ப்பிக்கிறேன் .


*தவறென்றால் மன்னி
சரியென ஒன்றை எண்ணி
எழுதும் நான் தோணி
உதவுவது கணினி
படிக்கும் நீங்களோ பெரிய ஞானி
தமிழ்த்தாயே இந்த அடியேனை கவனி ..



இப்படிக்கு அடியேன்
ம .சுந்தர மூர்த்தி

எழுதியவர் : ம.சுந்தர மூர்த்தி (2-Feb-14, 10:40 pm)
சேர்த்தது : sundaramoorthi
பார்வை : 136

மேலே