யுத்தம்
யுத்தம்
என்ற பெயர்
வைத்து யுத்தமொன்று
செய்கிறது
யுத்தத்தின் முடிவை
தெரியாமல்...
ஈனக்குரல்
மனிதநேயம் மாண்டு
போகும்
அவல நிலை..
சொல்லப்படாத
வேதனை கொடுக்கப்படாத
தண்டனை
எழுதப்படாத
ரோதனை...
மனம்
பதறும் -நினைவு
சிதறும் - உள்ளம்
குமுறும்
இந்த வேதனையை
காண்பதற்கு
இரத்தத்தின்
நதிகள் கரைபுரண்டு
செல்கிறதோ
என்ற ஒரு பிரம்மை
எண்ணத்தில்
ஊடுருவி
உயிரையும்
உறையச்செய்யும்
சில நேரம்
பைத்தியமும்
பிடிக்கெச்செய்யும்..
மனிதனை
மனிதன் அழிக்கும்
நிலை
ஒரு நாள்
மாறிடுமோ..!
பகை
உணர்வும் பழி
உணர்வும்
மறந்த புது உலகம்
தோன்றிடுமோ..!
காலமே நீதான்
தக்க பதில் தரவேண்டும்
அமைதியான
வாழ்வை
நிறைவாக
தந்திட வேண்டும்...