எனக்கான என் புரிதல்கள் 2

காட்டாற்று வெள்ளம்
கட்டற்ற சீற்றம்
ரசிக்கிறேன்.
குப்பைகளை அடித்துவிரட்டி
அது சகாசம் நடத்துகிறதே
பாராட்டுகிறேன்.


இதழ் விரிக்கும் பூவின்
சத்தம் ரசிக்கிறேன்
காய்ந்து சருகாகி
உரமாவதை பாராட்டுகிறேன்.

என் ரசனைக்கும்
என் பாராட்டிற்கும்
வித்தியாசமுண்டு
முரண்பாடுகள் இல்லை.
************************************
ரத்தம் கொதித்து
அழுத்தம் அதிகரித்து
மனம் வெம்பியபோதெல்லாம்
ஆப்புக்களை சொருகிக்கொண்ட
மரங்கள் பிளந்துக்கொண்டு
என் வாலுக்கு காத்திருக்கிறது...!

வானரம் பரிணாமடைந்தது
அதற்கு தெரியவாய்ப்பில்லைதான்..
அற்பபுத்தி அப்படித்தானே..!


முன்னுக்கு வருவதும்
பின்னுக்கு போவதும்
மண்ணுக்கு போவதும்
விண்ணுக்கு செல்வதும்
என் விருப்பமே அன்றி
அவரவர் கட்டளை அல்லவே...!

ரசிகன் எவனோ
அவனே நாளை
ரசிக்கப்படுகிறான்.
நான்
ரசிக்கப்படவேண்டியவன்
வஞ்சிக்கப்பட தோன்றியவன் அல்லவே...!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (2-Feb-14, 11:54 pm)
பார்வை : 95

மேலே