முதிர் கன்னிகள்
முப்பதும் தாண்டுகிறது
நாப்பதை எதிர்நோக்கி...
என்னை நோக்கிதான்
எம் மகனும் வரவில்லை...
தீ பட்டு எரிவதுபோல்
மனப்பூ பற்றி எறிகிறது...
தேனீ ஒன்று தீண்டாமல்
தேயும் ஒரு மலரிங்கு...
சுடர் விடுகின்ற என் வாழ்வும்
சூனியமாய் ஆனதேனோ...!
படர் கொடிக்குக் கொப்பில்லை
தொடர்வதிலும் ஏதும் தப்பில்லை...
வல்லவன் எவனும் வரவில்லை
வாழ்வேதும் தரவுமில்லை...
நாளை நாளை என்றே
நகர்கிறது என் வாழ்வும்...
உற்றார், உறவினர், சுற்றமும்,
நட்பும் எல்லாமே சூனியமே...