பண்பாய் தமிழில் படி

கண்ணில் அருளும் கருத்தினிலே நேர்மையுமாய்
விண்ணில் திகழ்வெண் நிலாசொரியும் -தண்ணொளிபோல்
பண்பெல்லாம் பெற்றேயிப் பாரில் சிறப்படைய
பண்பாய் தமிழில் படி!

எழுதியவர் : அகரம் அமுதன் (3-Feb-14, 12:06 am)
பார்வை : 95

மேலே