என் வாழ்க்கை

""என் வாழ்க்கை""
.....அறியாத வயதில் தந்தையை இழந்தேன் , அறிந்தும் அறியாத வயதில் காதலியை இழந்தேன் , அறிந்த வயதில் வாழ்க்கையில் நிம்மதியை இழந்தேன் .. .. "அப்பா" ..
நிறைய பசங்க அவங்க அப்பாவோட பாசமா பழகறது பார்க்கும் போது மனதில் கவலையும் , கண்களில் சிறுகண்ணீர்த்துளியும­் மட்டுமே மிஞ்சுகிறது .. என் அப்பா இருந்திருந்தால் நான் வாழ்க்கையில் இன்னும் சற்று உயரத்தில் இருந்திருப்பேனோ? என்ற கவலை என்றும் மனதில் இருக்கிறது .. எங்க அப்பா இறக்கும் போது எனக்கு 2 வயசு ,[கண்களில் கண்ணீர்த்துளி] உண்மைய சொல்லனும்னா நான் எங்க அப்பாவ பார்த்ததுகூட இல்லை .. ஃபோட்டோவுல பார்த்துதான் இவருதான் எங்க அப்பா என்று அறிந்து கொண்ட நிலை .. .. ஒவ்வொரு பொங்கலுக்கும் நிறைய பசங்க அவங்க அப்பாக்கிட்ட அது வேணும் , இது வேணும்னு கேட்பாங்க .. ஆனா! நான் ஒவ்வொரு வருஷமும் மண்வெட்டிய எடுத்துக்கிட்டு எங்க அப்பாவோட சமாதிய சுத்தம் பண்ண போவேன் கண்களில் கண்ணீரோடு .. பல பசங்களுக்கு தன் அப்பாதான் ஹீரோ .. எனக்கு அப்படி ஒருத்தர் என் வாழ்க்கையில இல்லவே இல்லன்னு நினைக்கும் போது?????
.. .. எனக்கு எல்லாமே எங்க அம்மாதான் ..22 வருஷம் எங்க அம்மா கஷ்டப்பட்டு , சொந்தக்காரங்க உதவியில்லாம தனியாளா நின்னு எங்கள வளர்த்தியிருக்காங்க .. எனக்கு இருக்கும் மிகப்பெரியகவலை என்னவென்றால் எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்து , மருமகளா வருபவள் காலத்தின் சதியால் எங்கே என்னையும் , எங்க அம்மாவையும் பிரிச்சிடுவாளோ என்ற பயம் என்னை தினமும் அச்சுறுத்துகிறது .. கடைசி வரைக்கும் எங்க அம்மாவ நான் நல்லபடியா பார்த்துக்கனும் .. .. ..
'எங்க அக்கா'..
என் உலகில் எனக்கு ரொம்பவும் பிடித்தவள் , திறமையானவள் , அன்பானவள் , .. ஆனால் , நேற்று பார்த்த ஒரு பெண்ணிற்க்காக அவளிடம் ஒருவாரம் பேசாமல் இருந்தேன் .. அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய முட்டாள்தனம் .. .. என் கவலைகளை தன் வார்த்தைகளால் கரைக்கும் திறமை படைத்தவள் .. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு , ஒரு குழந்தையும் இருக்கு .. MA படிக்கிறா .. அவளுக்கு வாழ்க்கையில் எந்த கஷ்டமும் வந்திரக்கூடாது என்பது என் ஆசை..
'காதல்' .. ..
சூழ்நிலை என் காத[லை]லியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டது [மன்னிக்கவும் மேல சொல்ல விருப்பமில்லை] .. அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் அவ்ளோதான் .. அவங்களுக்கு கல்யாணம் கூட ஆகிடுச்சு ..
'நான்' .. ..
ஓரளவு படித்தவன் .. பெண்களின் மீது அதிகம் மரியாதை உள்ளவன் .. வாழ்க்கையை வாழத்தெரியாமல் வாழ்ந்துகொண்டிருப்பவ­ன் .. கோபப்படாதவன் .. அதிக அன்பு வைக்கக்கூடியவன் .. அதிகம் ஏமாறக்கூடியவன் .. வாழ்க்கையில் ஏமார்ந்து விடக்கூடாதென்று விழிப்புடன் இருப்பவன்!?!!
#it'sover
# எனக்காக இதை முழுதும் படித்ததற்க்காக என் நெஞ்சார்ந்த நன்றிகள்..?!!

எழுதியவர் : balaji (3-Feb-14, 6:27 am)
சேர்த்தது : BALAJI.G
Tanglish : en vaazhkkai
பார்வை : 64

மேலே