எனக்கு இணையாய் வா

நீ என்னை பின் தொடரும் அளவிற்கு
நான் சாதித்தவள் அல்ல
நீ முந்தி சென்றால்
உன்னை பின் தொடர
நான் சக்தி பெற்றவள் அல்ல
உனக்கு வழிகாட்டவோ
உன் வழி தொடரவோ
இயலாதவள் நான்....
வா இருவரும் இணைந்தே நடப்போம்
தோழை எனும் உணர்வோடு
தோள் மீது கைபோட்டு....

எழுதியவர் : சித்ரா ராஜ் (3-Feb-14, 9:27 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : enakku inayaai vaa
பார்வை : 69

மேலே