கடல் படைத்தவள்

மாலை சூரியனில்
புரண்டு எழுந்த
ஆரஞ்சுகள்
அவள் இதழ்கள்......

காலைத் தென்றலின்
புல்லரிப்பு
அவள் புன்னகை....

மதியம் உருண்டோடும்
ஒற்றை துளி வியர்வை
இதழோர மச்சம்.........

பிழையில்லா கவி செதுக்கும்
உளிகள்
அவள் விழிகள்.........

ஆறாம் விரல் என்றால்
ஏழாம் அறிவெங்கே ?
எனினும் ஆம் என்பேன்,
அது அவள் இடை.......

கற்றைக் கூந்தல்
ஜப்பான் ஹைக்கூ...

ஜென் தத்துவம்
இரட்டைப் பிறவி.....

விரலெல்லாம் தூரிகை,
என்
பின்னந்தலை முடி கோர்க்கும்
ரகசிய ஓவியம்......

மீசை குத்தும் என்பது
அவள் சாக்கு- அது
மிச்சமிருக்கும்
முத்தத்தின் ஒற்றைக் கால் தவம்.......

சந்தம் இதுவென- அவள்
கை கோர்ப்பு.....
சத்தம் தொலைதலில்- அவள்
நகப் பூச்சு......

மதிக்குள் மது
அவள் வாசம்.....

இமைக்குள் பனி தூவும்
அவள் இமையம்.......

இரவைத் தூண்டில் என்பவள்
மீனாகி கடல் படைப்பாள்.....
கூட,
கதவடைப்பாள்......

எழுதியவர் : கவிஜி (4-Feb-14, 2:57 pm)
பார்வை : 188

மேலே