வீரம் சாவது பெருமையோ

எழு தமிழா
எழு தமிழா
தூங்கியது போதும் எழு ..

தரித்திரம் தீர
சரித்திரம் எழுத
பக்கங்கள் உண்டு
ஏராளமாய்...

தமிழ் ஈழ
மண்ணை மீட்க
தலைகளையும் கொடுப்போம்
தாராளமாய்...

பொன்னை கேட்டால்
பிச்சை இடலாம்
எம்மண்ணைக் கேட்டால்
இடலாமோ ?

எழு ... விரைந்து எழு
அடிபட்ட புலியாய் ...
இடு முழக்கமிடு
வெகுண்டெழுந்த களிறாய்...

வெட்ட வெட்ட தலையை தூக்கும்
வாழை மரம் போல் எழுவோம் ....
சொட்ட சொட்ட குருதி
வடிந்தாலும் மண்ணை ஒன்றையே கேட்போம்

சுத்தப்பால் கொடுத்த
மாந்தர் தன்னை
கத்த கதற
பலிகொடுத்தோம்...

பிஞ்சு தமிழனையும்
நஞ்சுத் தோட்டகளுக்கு
விடையளித்தோம்

வீரராய் சாவது பெருமை
வீரம் சாவது பெருமையோ ?

எழுதியவர் : பெருமாள் (4-Feb-14, 4:26 pm)
சேர்த்தது : பெருமாள்
பார்வை : 113

மேலே