மரண வலிகளோடு

மனதை காளானிடம் கொடுத்து விட்டு,
நித்தம் அவனிடம் மன்றாடிக்கொண்டிருக்கும்... முத்துக்களின் போராட்டத்தை பார்க்கையிலே,
என் இரும்பு இதயமும் உருகத்தான் செய்கிறதே....

நட்பையும்,காதலையும் சுமந்து கொண்டு வலிகளை எழுதும் வரிகளும் மரணத்தான் செய்கின்றன ..
செல்லரித்து போன உன் மனதின் மரண வலிகளை வரிகளாக்கும்போது...

சோகங்களை மறக்க,புகையிடமும் போதையிடமும் உன் மனத்தை கொடுத்தாய், உன் வாலிப வயதில்...
இன்று,பரிசாய் பெற்றாய் புற்றுநோயை....

உன் மரணத்திற்கு தேதி குறித்து விட்டு,
மரணபயத்தை உன் கண்களில் காணும் போது,
கடவுளே கல்லாய்த் தான் இருக்கிறாரோ...

மரணத்தோடு நீ யுத்தம் செய்து,
தினம் தினம் மரண வலிகளோடு போராடுகிறாய்..
மரண வாசலில் நின்று,
மரண வலியை ருசித்து கொண்டிருக்கும்,
உன் உள்மனதின் உளறல் என்னவென்று தெரியவில்லை...


காலன் உன்னை சிக்கிரமே கூட்டிச் செல்லட்டும்...
யுத்தம் செய்து கலைத்து போன உன் மனது உறங்கட்டும்....





எழுதியவர் : கலை (10-Feb-11, 10:13 am)
சேர்த்தது : kalai
பார்வை : 466

மேலே