ஆசிரியர் தகுதி தேர்வு

uவளைகாப்பு போட்ட கையோடு நான்காவது மாடி ஏறி
நாலு பேரிடம் கேட்டு நுழைந்தேன் தேர்வு அறைக்குள்.கிடைத்ததோ 80 மதிப்பெண் .கை குழந்தையை என் தாயிடம் விட்டு விட்டு வேகமாய் நுழைந்தேன் தேர்வு அறைக்குள் இரண்டவது முறையாக கிடைத்ததோ 84 மதிப்பெண் .இப்போது நடைபயின்ற என் குழந்தையிடம் ,என் அன்பு கணவனிடம் எரிந்து எரிந்து விழுந்தேன் .எழுதவேண்டுமே தேர்வு நன்றாக என்று.கிடைத்ததோ 101 மதிப்பெண்,இன்னும் கிடைக்கவில்லை வேலை.இந்தநிலையில் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்ற 83 மதிப்பெண் போதும் என்றனர் நேற்றைய வேளை.

எழுதியவர் : (4-Feb-14, 8:59 pm)
சேர்த்தது : prabhakarthik
பார்வை : 70

மேலே