உயிர்தோழனே
நானும் பசியோடிருக்க
நீயும் பசியோடிருக்க
யாரோ தூக்கி எறிந்த
ஒரு கவள உணவை
வாயில் போடும் முன்
ஒரு கணம் யோசித்து
என்னையும் கை நீட்டி
அழைத்துப் பகிர்ந்ததால்
நீயும் எனக்கு ...
என் சுரனைகள் உள்ளவரை
உப்பிட்ட உயிர்தோழனே......