அன்பின் அழைப்பு

உள்ளம் என்னும் ஊரினிலே
எண்ணிலா எண்ணங்கள் வீடாக
உண்மை என்னும் ஒரு வீட்டில்
பண்பெனும் ஒளியை ஒருவன் வைத்தான்
அன்பெனும் இறைவன் முன் தோன்றி - அவன்
அறிவினை சோதிக்க விடை கேட்டான்

பார்வை எப்படி வேண்டும்?
தீமை தவிர்க்கும் பார்வை வேண்டாம்
நோக்கியே எரிக்கும் விழிகள் வேண்டும்

செல்வம் எப்படி வேண்டும்?
நல்லோர் கைப்பட வேண்டும்
பிறர் நலனுக்காக ஓடிட வேண்டும்

ஈகை எப்படி வேண்டும்?
கொடுத்து உதவ வேண்டும்
இனி கேட்காது உயர்த்த வேண்டும்

உயர்வு எப்படி வேண்டும்?
நல்லோர் விரும்பிட வேண்டும்
சிரம் உன்தாள் பணியவேண்டும்

வன்மை எப்படி வேண்டும்?
நாவினிலே அதுவும் வேண்டும்
நன்மை பயக்கும் சொற்களாய் வேண்டும்

பெண்மை எப்படி வேண்டும்?
அவளுள் ஆணாய் வேண்டும்
அறிவினில் தனித்து உயரவே வேண்டும்

அறிவு எப்படி வேண்டும்?
அழிக்கும் அறிவியல் வேண்டாம்
அளிக்கும் அளவில் அது(வும்) போதும்

(பேர்) இன்பம் எப்படி வேண்டும்?
நல்லார்க்கு வாழ்வு முழுவதும் வேண்டும் - அப்படி
இல்லார்க்கு இமைப் பொழுதாவது வேண்டும்

துன்பம் எப்படி வேண்டும்?
எனக்கு மட்டும் வேண்டும்
பிறர் தொடராது வேண்டும்

கொடாது ஒரு பொருள் கொடுத்தே ஆகிடின்?
கொடேன் எனும் பதில் கொடாது வேண்டும்

(தேவன் சொன்னது)
நானாய் நீயும் ஆனாய் - இனி
உன் இடம் என்னிடம் என்றான்
அணைத்துக் கொண்டான்

எழுதியவர் : சண்முகானந்தம் (5-Feb-14, 8:58 am)
Tanglish : anbin azhaippu
பார்வை : 265

மேலே