என் ஆசையை சொல்ல என் காதலி எங்கே இருக்கிறாள்?

வான் மேகம் பொய்த்தாலும்
உன் கார்மேக கூந்தலின்
சாரலில் நனைய ஆசை...

இருளில் உறங்கினாலும்
உன் இமைக்குள் இருக்கும்
விழியில் உறங்க ஆசை...

தூரத்தில் இருந்தாலும்
உன் சுவாசத்தோடு
உயிர் கலந்திட ஆசை...


உளியின் ஓசைபோல
உன் உதட்டின் வழியே
வார்த்தைகளாகிட ஆசை...

இதயத்துடிப்பின் இடைவெளியை
உன் இதயதுடிப்பால்
நிரப்பிவிட ஆசை...

விண்ணுக்கு ஒரு நிலவுபோல
எனக்குள் ஒரு நிலவாய்
உன்னை வரைய ஆசை....

நித்தம் ஒரு கவிதை
உனக்காகவே எழுத
முத்தம்போன்ற ஆசை....

கவிதையை சொல்ல தமிழ் காதலி இங்கே இருக்கிறாள்...
என் ஆசையை சொல்ல என் காதலி எங்கே இருக்கிறாள்?

எழுதியவர் : கார்த்திக் . பெ (25-May-10, 11:58 am)
பார்வை : 1172

மேலே