என்னவள்

என்னவளே என் முகம் பாராது!
என்ன வேலை உனக்கு!
எட்டி நின்று பார்த்தாலும்
எட்ட நிற்பதெதற்கு!
உண்ணவில்லை குடிக்கவில்லை
உறக்கமில்லை எனக்கு!
உன்னை நிதம் நினைத்தாலும்
உதவவில்லை நீயெனக்கு!
ஏங்குகிறேன் உனை ஏந்துகிறேன்
ஏன் பிடிக்கவில்லை உனக்கு!
ஏமாற்றம் என்றும் ஏமாற்றம்
ஏனடி அது எனக்கு!
ஊரவர்கள் பல பேசினாலும் என்றும்
ஊக்கமடி உன் மேல் எனக்கு!
ஊமையாக நிதம் அழுகிறேனே - ஏன்
ஊக்கமில்லை என்மேலுனக்கு!
இந்திரனாய் அழகு சந்திரனாய்
இனிக்கவில்லை நான் உனக்கு!
இரவு பகல் என்றும் அழுகிறேனே
இரக்கமில்லை உனக்கு!
ஒற்றுமையாய் என்றும் ஓருயிராய்
ஒன்று சேர்ந்திடலாம் நமக்கு!
ஒருமையில் இங்கு அழுகிறேனே
ஓசை கேட்கவில்லை உனக்கு!
ஆடவன் இங்கு ஏங்குகிறேன்
ஆசையில்லை என்மேலுனக்கு
ஆசை உன் அழகுமுகங்காண
ஆவலடி எனக்கு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
