+நானும் ஒரு கவிதை எழுதினேன்+
நானும் ஒரு கவிதை எழுதினேன்!
சிகரம் தொடலாம் என்றெண்ணி
சிறுசிறு அடிகள் எடுத்துவைத்தேன்
சிறுசிறு சொற்களை எடுத்து தொடுத்து
கவிதை மாலை செய்து வந்தேன்
கவிதையை ரசிக்கத்தெரிந்தவன்
வாழ்க்கையை ருசிக்கத்தெரிந்தவன்
கவிதையை படைத்தவனை விட்டு
கவிதையை படிப்பவனுக்கு சென்றடையும் கவிதை
சொல்லவந்த அர்த்தமே
உணரப்பட்ட போது
ஜெயிக்கிறது
அர்த்தம் அங்கே
அறியப்படாத போது
கவிதையும் அங்கே அழுகிறது
கவிதையை ரசிப்பவன் ரசிகனாகிறான்
கவிதையை உணர்ந்தவன் கவிஞனாகிறான்
எனது கவிதை
விண்ணைத்தொட்டதோ இல்லையோ
அது
உன்னைத்தொட்டது
உன் நட்பு மழையில் நனையச்செய்த கவிதை
இன்று சிறு
நீராய் இருக்கலாம்
நாளை பெரும்
ஆறாய் மாறும்
ஒரு நாள்
நிச்சயம் இந்த
உலகை ஆளும்