இன்றைய நிலை

இல்லமோ பெரிது
இருப்பவரோ சிறிது ..!!
படிப்போ அதிகம்
பண்போ குறைவு..!!
அதீதவளர்ச்சி மருத்துவத்தில்
அந்தோபரிதாபம் உடல்நலத்தில் ..!!
தூர நிலவையும் தொட்டுவிட்டோம்
பக்கத்துக்கு வீட்டாரையோ நாமறியோம் ..!!
அதிகமான வருமானம்
அமைதி இல்ல மனம் ..!!
மக்களோ அதிகம்
மனிதாபிமானமோ குறைவு ..!!
விலை உயர்ந்த கைகடிகாரம்
நேரம் மட்டும் நமக்கில்லை ..!!!

எழுதியவர் : ரம்யா எம் ஆனந்த் (6-Feb-14, 10:36 am)
சேர்த்தது : ரம்யா எம் ஆனந்த்
பார்வை : 94

மேலே