பேறு
பஞ்சணை யிலே கண் துஞ்சாமல்
பிரண்டு பிரண்டு படுத்தாள்.
கண்ணிலே நீர் வழிய
குமைந்து குமைந்து அழதாள் .
தோளிலே கை வைத்து
மெதுவாக கன்னத்தை திருப்பினான் .
முகம் சிவக்க உதடு துடிக்க
குலுங்கினாள் அவன் மடியில் விழுந்து.
பூப் போன்ற கைகளை எடுத்து
வருடினான் இதமாக .
கதறினவள் சற்றே அமைதியானாள்
அவனின் தோளிலே .
திணறி திணறி உடைந்த குரலிலே சொன்னாள்
கரு கலைந்ததை.
மனம் பதறிய அவன் அவளை மேலும்
தன்னோடு இறுக அனைத்துக் கொண்டான்.
இருவருக்கும் வயது இருக்க வருத்தம் களைந்து
மிண்டும் கிட்டும் சடுதியிலே என்று வாழ்த்துக .
.