தமிழன் எங்கெல்லாம்

தமிழன் படு கொலை
ஈழத்தில் மட்டும்.

தமிழர்கள் செய்த பாவம்
தான் என்னவோ?

எங்கு சென்றினும்
ஒரு கொடிய செயல்.

மியன்மார் பர்மாவாக
இருந்த பொழுது

வளம் காத்த தமிழன்
நிலம் இழந்து நின்றான்.

புலம் பெயர்ந்த தமிழன்
மலேயாவில் இன்று

தடம் புரண்டு தடுமாறி
நிற்கிறான் பாவமாக.


ஊரை மறந்து வாழும்
தமிழன் இடர்கி றா ன் எங்கோ ?


உற்றாரை துறந்து வாழும்
தமிழன் வீழ்கிறான் எதற்கோ ?


ஒற்றுமை என்பது தமிழனுக்கு
என்ன வென்றே தெரியாதொ

அது தான் காரணமோ
அவனின் கொலைக்கும், அரட்டலுக்கும்


.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (6-Feb-14, 1:03 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 472

மேலே