மழையே வா

மேகம் தூவும் கண்ணீர் மழைதான்
---மேனி நனைத்திட வேண்டும்
வேகக் காற்றும் புனல்நீர் ஊற்றும்
---விரைவில் குளிர்ந்திட வேண்டும் !

தாகம் தீர்க்கும் தண்ணீர் அமுதம்
---தடையிலாது வர வேண்டும் !
காகம் கவிழ்த்த காவிரி நதிபோல்
---கரையுடைத்து வா மழையே

யாகம் செய்தோம் யார்தான் உன்னை
---வெறுப்பார் வாவா மழையே !
மோகனப் பொலிவே உன்னைவிட உலகில்
---மோட்சம் ஒன்றும் இலையே !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Feb-14, 5:09 pm)
Tanglish : mazhaiyae vaa
பார்வை : 180

மேலே