கடவுளே என் காதலே

ஒருவன் : அய்யா முனிவரே எனக்கு ஒரு சந்தேகம் அதை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும் ..

முனிவர் : சொல்லு தம்பி ..

ஒருவன் : எனக்கு திடீரென்று ஒரு பெண்ணின் மீது காதல் தோன்றிவிட்டது என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள் ....ஆனால் என்னால் நம்ப முடியவில்லை !!!! அதே சமயம் அவளை பார்க்காமல் பேசாமல் இருக்க முடியவில்லை ..
இது காதல் தான் என்று மனம் ஒத்துக் கொண்டாலும் எத்தனையோ பெண்கள் இருந்தும் அவள் ஒருத்தி மீது மட்டும் எனக்கு காதல் வரக் காரணம் என்ன ???

முனிவர் : தம்பி அதற்க்கு முன் நான் கேட்பதற்கு பதில் சொல் " கடவுள் எங்கு இருக்கிறார் " ?

ஒருவன் : எங்கும் இருக்கிறார் முனிவரே

முனிவர் : அப்படி இருக்க " நாம் ஏன் ஆலயங்களுக்கு சென்று கடவுளை வழிபடுகிறோம் " ? அவரை எங்கு வேண்டும் என்றாலும் வழிபடலாமே ..??

ஒருவன் : அய்யா நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இதற்க்கு எனக்கு பதில் தெரியவில்லை புரியவில்லை தயவு செய்து நீங்களே சொல்லுங்கள் நாம் ஏன் ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும் ?

முனிவர் : தம்பி கடவுள் எங்கும் இருக்கிறார் இல்லை என்று யாரும் சொல்லவில்லை ஆனால் அவரை கண் கொண்டு , மனதில் நிறுத்தி அவரை நாம் மனதில் உணர வைக்க ஒரு இடம் வேண்டும் அதுதான் ஆலயம் அதற்குத்தான் ஆலயத்தில் சென்று நாம் வழி படுகிறோம் ...
அதுபோலத்தான் எத்தனை பெண்கள் உலகில் இருந்தாலும் உன் மனதை , உன் சுவாசத்தை உனக்கு உணர வைக்க ஒருத்தியால் மட்டுமே முடியும் அப்படி உணர்ந்ததால் தான் உனக்குள் அவள் குடிகொண்டு விட்டால் உனக்குள் காதல் காற்றை நீ சுவாசிக்க காரனமாகிவிட்டால் என்றார் .....

காதல் என்பது கடவுள் போன்றது ..
பார்க்க முடியாது உணரத்தான் முடியும்..

கல்யாணம் என்பது பிறக்கும் குலம்..
அதை நீ ஏற்றுகொண்டுதான் ஆகவேண்டும் ...

ஏற்றுகொண்ட குலத்தை என்று நீ உணர்கிராயோ அன்று உன் வாழ்க்கை முழுமை பெரும் ....

எழுதியவர் : சாமுவேல் (6-Feb-14, 2:19 pm)
பார்வை : 189

மேலே