சமூக பெண்கள்

தளத்தில் veeramani வெங்கட் என்ற நண்பர் கேட்ட கேள்விக்கு என் பதில்


பெண்மையும் பெண்ணும் மதிக்க படுவதில்லை இன்றைய சமூக சூழ்நிலை ஏன் இப்படி இருக்கிறது ?


இது தான் அவர் கேட்ட கேள்வி.,,,,

நண்பரே, நானும் ஒரு பெண் தான் ஆனால் நான் அவ்வாறு உணரவில்லை சிலரில் வாழ்வில் சில அனுபவங்கள் கசப்பானதாக இருக்கலாம் அதற்கென்று சரியான காரணம் ஏதும் இருக்கும்

காரணமின்றி எந்த காரியமும் இந்த உலகில் நடப்பதில்லை


பெண்மை போற்ற படுவதில்லை என்ற தங்களின் ஆதங்கத்தை நான் பாராட்டுகிறேன் ஆனால் யாரால் ? என்பதே என் கேள்வி

யாரும் எங்களை போற்றவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம் இது விரக்கிதில் வந்த வார்த்தைகள் இல்லை

சமூகம் என்பது ஆண் பெண் கலந்த ஒன்று தான்,,, ஆனால் ஆண்கள் சுதந்திரமும் விடுதலையும் கேட்பதில்லையே

ஏன் பெண் மட்டும் கேட்க்கிறார்கள்? பெண்களை ஆண்களா அடிமை செய்கிறார்கள் ??

என்னை கேட்டால் "இல்லை' என்பதே என் பதில்
இது பல பெண்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம் என்ன பெண் இவள் என்று என் மீது கோபம் கூட வரலாம் ஆனால் இது தன் உண்மை,,, பெண்ணியம் என்பது

"பெண்களே பெண்களை பெண்மையை காக்க அடிமை படுத்துவதே பெண்ணியம்"


இது இதுவரை யாரும் ஏற்று கொள்ளாத உண்மை,,, ஒரு பெண்ணை பற்றி அவதூறு பேசுபவர் நிச்சயம் இன்னோர் பெண்ணாக தான் இருப்பார்

இதை நான் வருத்ததோடு ஒத்து கொள்கிறேன்


நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை,,,, பெண்ணை ஆண் தான் அடிமை செய்கிறான் என்று நீங்கள் சொன்னால்,,,,,,, உங்களிடம் கேட்க்க என்னிடம் ஒரு கேள்வி உண்டு

"பெண்ணை ஆண் அடிமைபடுத்துவது உண்மை என்றால் அந்த ஆண்களே ஏன் பெண்ணியத்திற்கு எதிராக போராட வேண்டும் நியாயமாக பெண்கள் தானே ஆண்களுக்கு எதிராக போராடி இருக்க வேண்டும்


பெண் சிசு கொலை, குழந்தை திருமணம், விதவைகள் மறுமணம் இதை எந்த பெண் எதிர்த்திருக்கிறார்,,,,,,, மாறாக ஒரு விதவை வீதியில் வந்தால் அதை சகுன குறையாக எண்ணி அவளை தூற்றி இருக்கிறார்கள் எனக்கு தெரிந்த வரையில்
,,,,,,,,,,நம் பெண்மையின் கொடுமைகள் களைய பெரியார், பாரதியார், ராஜாராம் மோகன் ராய்,,,, ஏன் அயல் நாட்டான் வில்லியம் பெண்டிங் பிரபு,,, இவர் ஏன் கொடி தூக்க வேண்டும் அவர்கள் ஆண்கள் தானே ,,,,,,,,,, இந்த வரிசையில் ஒரு பெண் பெயர் பிரபல படவில்லையே ஏன்??? ஏன் என்றால் இதை எல்லாம் தைரியமாக முதலில் செய்தவர்கள் ஆண்கள் தான்


சரி இதை எல்லாம் விடுங்கள் நம் தமிழ் இலக்கியத்தையே எடுத்துகொள்வோம்


ஒவையார் பெண்பாற் புலவர் அவரின் வாய் மொழி அறிவீரா??

"தையல் பேச்சு கேளேல் "

தையல் என்பது பெண்ணை குறிக்கும்

ஒரு பெண் பார் புலவரே ஒரு பெண்ணின் பேச்சை கேட்க்காதே ஆண்மகனே என்று தான் கூறியுள்ளார்

ஆனால் பாரதியார் ஆண்பாற் புலவர் அவர் சொன்னது ,


"மாதவரை பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் "


இதிலிருந்து புரிந்திருக்கும் பெண்ணியத்தின் நிலை என்னவென்று


"பெண்ணியம் என்பது பெண்கள் தங்களின் மதிப்பை காக்க போட்டு கொண்ட வேலியே தவிர இதில் அவர்களின் மதிப்பு குறைய ஒன்றும் இல்லை,,,,,, அதை ஆண்கள் குறைப்பதும் இல்லை ,,, உண்மையிலே பெண்ணை காக்க படைக்க பட்டவன் தான் ஆண் அதனால் தான் ஆண் முதலில் படைக்க பட்டான்


சில மூடர்கள் இதை மறந்து வாழ்வது அவர்களின் அறியாமையே இதனால் எங்களின் பெண்மையின் மதிப்பு குறைவதில்லை "


விளையாட்டு, படிப்பு, அரசியல், சமூகம் என்று 100ரில் 90 சதவீத பெண்கள்; சாதித்து கொண்டுதான் இருக்கிறோம்


எனவே நண்பரே உங்களின் ஆதங்கம் கலைத்து விடுங்கள்

எழுதியவர் : நிலா மகள் (6-Feb-14, 3:18 pm)
Tanglish : samooka pengal
பார்வை : 2694

மேலே