உனக்கு பிடிக்குமென்று
உனக்கு பிடிக்குமென்றுதான்
புடவை கட்டினேன்
உனக்கு பிடிக்குமென்றுதான்
நகத்தை வெட்டினேன்
உனக்கு பிடிக்குமென்றுதான்
கவிதை எழுதினேன்
உனக்கு பிடிக்குமென்றுதான்
சமைக்க பழகினேன்
உனக்கு பிடிக்குமென்றுதான்
நூல்கள் சேமித்தேன்
உனக்கு பிடிக்குமென்றுதான்
அசைவம் பழகினேன்
என் சுயம் தொலைத்தேன்
உன் கரம் பிடிக்க
கடைசியில் நீ
என்னையே பிடிக்காதென்றாயே....!