கற்ப்பிழந்தவனாய் இன்று நான்
வெடித்துச் சிதறி
எடுத்து வீசப்பட்ட
எனது
இதயத்தின்
ஒவ்வரு துகளும்..
அறுக்கமுடியாத
அணுவின் மூலமாகி..
பறந்து
விரிந்த அண்டத்தினுள்..
படர்ந்து
கிடக்கின்ற
இருள்களுக்கெல்லாம்
சிறு இரையாகிவிட்டது..!!
விளக்கு அணைந்ததும்
ஒளி கவ்வப்பட்ட
இடம்மாகிப் போனது எனது உயிர்..!!
எங்கு
நான் தேடுவது
எப்படி
சேகரிப்பது
எதனைக்கொண்டு
ஒட்டிச் சேர்ப்பது..!!
அதற்குள்
என் உயிரும்
என்னை விட்டு
அந்த இதயம் போல்
சிதறி காணாமல் போய்விடுமோ..!!
இதயமின்றி
துடியாய் துடிக்கின்றேன் நான்..!!
எங்கும்
நிறைந்திருந்த
உனது முக பிம்பம்
எங்கோ ஒரு மூலையில்
நின்றுகொண்டு
திரும்பிப் பார்க்க மறுக்கின்றது..!!
நான்
அழைக்கின்றேன்
புலம்பித் தவிக்கின்றேன்..!!
இன்னும் தூரமாய்
இன்னும் வேகமாய்
நீ சென்றுகொண்டிருக்கின்றாய்..!!
காற்றோடு
கரையத் தயாரான
நிலையினில் நீ..
உயிர்
நூலில்
கட்டி இழுத்து
நிறுத்தும்
முனைப்பில் நான்..!!
மிகப் பெரும்
மரணப் போராட்டம் அது..!!
விம்மி விழுகின்றது
உணர்வுகள்
எனக்குள்ளேயே
சொல்ல வார்த்தைகள் கிடைக்காததால்..!!
சொன்னாலும்
கேட்கின்ற தூரத்தில் நீ இல்லை..!!
இயல்பாய் இருந்த
என் உலகத்தினுள்
காதலை புகுதியவள் நீ..!!
மெழுகாய் இருந்த
என் காதலின்
திரி கண்டெடுத்து தீ மூட்டியவள் நீ..!!
ஒளியின்
வெள்ளமதனை
மொத்தமாய் உனக்கே சமர்பித்தேன்..!!
காதலென்னும்
மெழுகு
தீர்ந்துவிட்டது என நினைத்தாயோ..!!
அன்பென்னும்
ஒளி
அலுத்துப் போய்விட்டதோ..!!
ஏற்றிய நீயே
ஊதி அணைத்துவிட்டு சென்றாயே..!!
திரி கருகி
வெளிவரும் ஆவியென
என் உயிர்
அந்த இருளுக்குள்
புதையுண்டு
மறைந்து கொண்டிருப்பதை
கொஞ்சம் திரும்பிப் பார்..!!
என் காதலை
களவாடிச் செல்பவளே
உன்னிடம் அல்லாமல்
இனி எங்கனம் நான் தேடுவது அதனை..!!
எனக்கான
ஒருத்தி
நீ என்பதால்தானே
என்னையே நான் கொடுத்தேன்..!!
இன்று
நீ யார் என்று
என்னிடமே கேட்டுவிட்டாயே..!!
அங்கேயே.. உடைந்துவிட்டேன்..!!
காதல்
கற்ப்பிழந்தவனாய்
இன்று நான் கதறுகின்றேன்..!!
என்
உலகமெல்லாம் நிறைந்திருக்கும்
அந்த
மரண ஓலத்தின்
ஒரு துளிகூட
உன் உலகத்தினுள் எதிரொலிக்கவில்லையா..!!