காதல் பம்பரம்
![](https://eluthu.com/images/loading.gif)
நாட்கள் நகர மறுக்கிறது
என்னவள் இன்றி இயங்கும்
என் உலகத்தில்
தாகத்தால் தேடுகிறேன் உன்னை
ஆனால் நீயோ பாலைவனத்தில்
கானல் நீராய்
தெரியவில்லை,
ஒரு வேளை
நான் தேடுவது
பாலைவனமாகவும் இருக்க,
ஏனென்றால்
பாலை தவிர்த்து
தொலைந்தன நான்கும்,
நிலமது ஐந்தில்
நீயின்றி
திசையெட்டும் தேடிக்
கிடைக்கததால்,
பிதற்றுகிறேன் ஒன்பதாம் திசை
ஒன்று உண்டோ என்று
உணரவில்லை
நீ சாட்டையாகக்
கழன்று போவாய் என்று...
இருந்தும்
சுழலுகிறேன்
உனைத்தேடி
நீ சுழற்றிய
பம்பரமாக நான்..