பாலாற்றுக்கு பால் - என் கண்ணீர் கவிதை திருத்தப்பட்டது

ஆறு மனமே ஆறு
பாலாறு மனமே ஆறு
காலத்தின் கட்டளை ஆறு
காணவில்லை
தன் மடியில் மணல்
என்று ஆறு ...

ஆதிமுதல் அந்தம்வரை
உயிர்நாடி
ஆற்றின் நீர்
ஆதவன் முதல் கடவுள்
இயற்கைஅழகு மறு கடவுள் ...

அழகுடன்
நாம் திகழ
ஆரோக்கியம் தருவது
நல்ல நீரு
நம் ஆதிமுதல்
நம் அந்தம்வரை
உயிர்நாடி நீரு
அதனை உணர்வீரே நீ(வீ)ர் ...

இயற்கையை வணங்குகிறோம்
நம் அன்னையாய்
அன்னையை
அழிப்போமா நாம் ...

இயற்கையை அழிக்கின்றோம்
சிறிது சிறிதாக
அன்னையை அழிப்போமா
சிறிது சிறிதாக ...

ஆற்றினை சுரண்டுவது
நின்றுப் போனால்
ஆற்று மணலில்
நீர் ஊற்றாக இருந்து
மரம் செடிகள்
உயிர்ப் பெற்று
மழை பொழியாதா
காலத்தே ...

இயற்கையை வணங்குகிறோம்
நம் அன்னையாய்
அன்னையை
அழிப்போமா நாம் ...

ஆற்றினை அழிப்போரே
உணர்வீரே நீ(வீ)ர்
இல்லையென்றால்
உமக்கும் இல்லை நீர் ...

அழிந்துவிடும்
நம் தமிழ் உலகம்
அழிப்போரே நீ(வீ)ர் ...

Palar (Kannada: ಪಾಲಾರ್ ನದಿ, Telugu: పాలార్ నది, Tamil: பாலாறு) is a river of southern India. It rises in Nandi Hills, India in Kolar district of Karnataka and flows 93 km in Karnataka, 33 km in Andhra Pradesh and 222 km in Tamil Nadu before its confluence into the Bay of Bengal at Vayalur about 100 km south of Chennai.

The cities of Ramanaickenpet, Vaniyambadi, Ambur, Vellore, Melvisharam, Arcot, Walajapet (Anaicut), Kanchipuram, and Chingleput are located on banks of Palar River. Of all the total of seven tributaries, the chief tributary is Cheyyar River.

This River is so important for irrigation in the north and south Arcot districts of Tamil Nadu, but it flows a meager of 50 km in Andhra Pradesh, the Palar river had been seen dry for almost 20 years. Palar has been home for mud robbery and other illegal activities.

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (6-Feb-14, 9:13 pm)
பார்வை : 221

மேலே