கவிஞர் வலங்கை விசு..!
விசு.! ஆம்,
விசு என்றவுடன் இன்று
விசும்புகின்றன எங்கள் மனங்கள்..!!
" குருவிக்கு கூடு
உண்டு தமிழா,
உனக்கென்று ஒரு நாடு
உண்டா ", ஆம்.!
இது இக்கவிஞனின்
மன குமுறல்..!
பார்வையினால்
பணிய வைக்கின்ற பசுந்தமிழன்..!
இறைவன் இல்லை என்று,
இடையறாது வர்ணங்களினால்
இழைத்து, இடியன முழங்கி,
இடையில் இறுதி மூச்சு விட்ட,
முடிசூடா மன்னன்.!!
ஆம்.! விசு என்றவுடன்,
விசும்புகின்றன மனங்கள்.!!
மக்களின்
மடைமை நீக்க, மேடையேறி முழக்கமிட்டு,
மாயமாய் மடமை நீக்க,
முற்பட்ட முற்போக்கு முன்னோடி.!
இரத்ததின் வகை பார்க்கும்
பணி செய்து - இடை இடையே,
"கடவுள் இல்லை" என்று கூவி..,
இறுதியில் மாயமாய் கரைந்தும்,
இன்றும் மனம் வீசிக்கொண்டிருக்கிறார், - அவரை..
தெரிந்தார் மனதினில்..!!