விரும்புகிறேன்
கூந்தலை மேகம் என்றும்
நெற்றியை பிறைநிலவென்றும்
முகத்தையே முழுநிலவென்றும்
கழுத்துக்கு கற்பனை தேக்கி
மார்புக்கு உயிரையெ ஈந்து
இடுப்புக்கு சொத்தை எழுதி
மடிப்புக்கு மனதைக் கொடுத்து
காலை வாழை என்றும்
கண்ணை வாளை என்றும்
ஆயிரம் கவிதை எழுதி
மான் போல் மீன் போல் என்று
பொய் மேல் பொய்யை அடுக்கி
உன்மேல் உள்ள அன்பை சொல்ல
என்னால் ஆகாதடி....
ஒன்றே ஒன்று சொல்வேன்
...
உன்னை நான் விரும்புகிறேன்.!!!!