கடவுளின் பிரதிநிதி

விநியோகங்களுக்கான
கருணைகளை எல்லாம்
சேமித்துவைக்க
கடவுள் படைத்தக் களஞ்சியம்
அம்மா!

அடையாளம்
காண முடியாத
பொழிதலுக்கான
மேகங்களை
அன்பாய்
அடைத்து வைத்திருக்கும்
வானம் அம்மா!


சகிப்புத்தன்மைகளுக்கான
பாடங்களை போதிக்க
தெய்வம் நமக்களித்த
பள்ளிக்கூடம் அம்மா!

தவிப்புகளுக்கான
தாற்பரியங்களோடும்
உருகுதலுக்கான
உத்தரவாதங்களோடும்
தரணியில்
மடிச்சுமையை
இறக்கி வைத்த பின்பும்
மனச்சுமையை
ஏற்றிவைத்துக் கொள்ளும்
தாய்மை என்பது
ஒப்பற்றக் கடவுளின்
விசுவாசத்துக்குரிய பிரதிநிதி!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Feb-14, 2:00 am)
பார்வை : 187

மேலே