உள்ளமும் லயிக்கும் உண்மையில்

​இயற்கை எழில் கொஞ்சுது இங்கே
இன்பம் பொங்கி வழியுது கண்டதும் !

இறக்கை இல்லா பறவைகளாய் படகுகள்
இருக்கையில் அமர்ந்த வாகனங்களாய் !

காணும்போது செல்லத் துடிக்கும் மனமும்
கரையில் நடந்தாலே துள்ளிடும் மனமும் !

வரிசையில் நிற்கும் காட்சியே மாட்சிதான்
வரவேற்கும் நம்மை நாகரீக அணிவகுப்பு !

உள்ளமும் லயிக்கும் உண்மையில் அங்கே
உணர்வும் பிறக்கும் உலாவந்தால் அங்கே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Feb-14, 10:30 pm)
பார்வை : 719

மேலே