குளக்கரைக்கு
குளக்கரைக்கு நீ வந்தால்
படித்துறையாய் நான் மாறிடுவேன்
குளத்தினில் நீ நீராட
நீர்த்துளியாய் மாறிடுவேன்
உன் அழகு மேனியின்
அழுக்கு திங்க
அழகான மீனாவேன்
உன் தங்க நிற மேனிக்கு
மஞ்சள் நீ உரசிடவே
மென்மையான கல்லாவேன்
நீ வந்து குளித்தப் பின்னே
கங்கைக்கே ஒப்பாவேன்....