உயிருள்ள நண்பர்கள்
"எல்லாரும் இங்க வாங்க.... அவசரமீட்டிங்...."
"எல்லாரும் வந்தாச்சா!"
"ம் ம் ..."
"அடுத்த வாரம் நம்ம சிவாவுக்கு பிறந்த நாளாம்..!"
"அப்படியா! இனிமே அவன் நம்ம கூட விளையாடமாட்டானா!?!?"
"புது நண்பர்களா வந்துடுவாங்கலே.."
"ஆமா கேரம் எங்கே?"
"இதோ வந்துட்டேன்பா.."
"ஏம்பா இவ்ளோ களைச்சி போயிருக்க?"
"அது ஒன்னும் இல்லேப்பா.. யாரோ தெரிஞ்சவங்க வந்துட்டாங்க.. சும்மா அடி அடின்னு அடிச்சு, அவங்க திறமையெல்லாம் காண்பிக்கிறாங்களாம்.. நம்மள படுத்தி எடுத்துட்டாங்கப்பா.."
"ஆமா! வழக்கமா சதுரங்கம் தானே விளையாடுவாங்க.. சதுரங்கத்த எங்கே காணோம்..!?"
"இதோ இருக்கேன்பா.. என்னை தான் தேடுனாங்க.. ஒரு ஆள காணோம்.. அதான் விட்டுட்டாங்க.."
"அச்சச்சோ எங்க அந்த ஒரு ஆள்?"
"நம்ப ரோபோ போயிருக்கான்.. ஒருவேளை குப்பையில போட்டு இருந்தாங்கன்னா.. தேடிட்டு வரப்போயிருக்கான்"
"ஏம்பா பிறந்த நாள்ல புதுப்புது நண்பர்களா வந்துடுவாங்க..
நம்மல்ல ஒரு சிலர் குப்பைக்கு போனாலும் போயிடுவோம்", என்று சொல்லி அனைவரும் அழ, சரி சரி கவலை படாதிங்க.. குப்பைக்கு போனாலும் நம்மள
யாராவது எடுத்துவச்சிக்கிட்டு விளையாடுவாங்க"
"என்ன எல்லாரும் ஒவ்வொரு திசையில இருப்போம். சரி விடுங்க அதை அப்புறம் பார்ப்போம்"
"சரி சரி யாரோ வர்ற மாதிரி இருக்கு.. எல்லாரும் அவங்க அவங்க இடதுக்கு
போயி அமைதியா இருங்க..."