காதல்-அன்றும் இன்றும்

கண்ணும் கண்ணும்

கலந்து வந்தது

அன்றைய காதல்

கண்டபின்னே உள்ளங்கள்

அன்பால் இணைந்தன

பின்னே காதல் மடல்களால்

அழகாய் வளர்ந்து

திருமணத்தில் மங்கலமாய்

முடிந்தது வாழ்கை தொடர்ந்தது




கணினிகள் இயக்கி

இணைய தளத்தின்

அரவணைப்பில் வளரும்

இன்றைய காதல்

இங்கு காதல் மலர

அழகிய மடல்கள் இல்லை

கணினி தாங்கும்

குறும் செய்திகள் உண்டு

வேகமாய் வளரும்

இன்றைய காதல்

நிலைத்து நிற்காமல்

அத்தனை வேகமாய்

மறைவதேனோ புரியலையே

உள்ளமும் காதலும்

உணர்சிகள் எழுச்சிகள்

கணினி இதனை அறியாது

அறிந்திடனும் புதிய

நம் தலைமுறையினர்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (9-Feb-14, 8:54 am)
பார்வை : 364

மேலே