மனிதா நீ யோசி
விழுந்தால் விதையாய் விழுவோம் !
எழுந்தால் மழைபோல் பொழிவோம்!
நெருப்பினில் எறிந்தாலும் எழுந்திடும்
பினிக்ஸ் பறவையாய் மாறிட துடிப்போம்...!
காற்றினில் கரைந்தாலும் தென்றலாய்
பிறரை தழுவியே மகிழ்விப்போம்...!
மரணம் என்பது ஒருமுறை!
மனிதம் வாழும் பல தலைமுறை!!
இயற்கை கூட நெறிமுறை!
உனக்கு இல்லை வழிமுறை!
ஒருநாள் காற்றை சேர்த்தே சுவாசிக்க
உன்னால் முடியாது....?!!
மறுநாளும் தேடி அலையவைக்கும்
அதுதான் இயற்கையின் தத்துவம்
மனிதா நீ மட்டும் என்றோ
பிறக்கும் பேர குழந்தைக்கு
இன்றே சேர்கிறாய் இது தானோ நியதி!!
பிஞ்சு குழந்தைகள் பசியில் துடிக்க
உன் நெஞ்சு பொருத்து
கல்லென கிடந்தாய்.....!
அஞ்சி கிடக்கும் அபலைகளை
வஞ்சத்தால் வலை விரித்து
அடிமை படுத்திட துடிக்கிறாய்...!
அளவுடன் இருந்தால் அமிர்தம்!
அதிகமானால் நஞ்சாய்
நெஞ்சினில் மாறி
உயிரையும் குடிக்கும்....!
அறியாதவனா நீ !
அனைத்தும் அறிந்தே செய்கிறாய்
ஆணவ செருக்கால்....!!
தங்க பஸ்பத்தை நீ தின்றாலும்
மறுநாள் மலமாகும்!
தயிர் சாதம் உண்டாலும்
உடல் உயிர்வாழும்!!
காணும் பயிர் கண்டு வாடிய வள்ளலார் !!
இறையடி சேர்ந்தாலும் அவர் பெயர்
சொல்லாதவரும் உண்டோ!!
நீ மட்டும் வாழ்வது இல்லை
உன் நினைவினை பதித்தால்
அது தான் வாழ்க்கை...!!
வருவதும் போவதும் வெறுமை!
வாழ்கையில் எதற்கு பொறாமை!!
ஒருவாய் உணவு உண்டாலும்
கரைந்தே உண்ணும் காகம்
அதற்க்கோ ஐந்தறிவு...!!
கோடி கோடியாய் பணம் குவிந்தாலும்
மூடி மறைக்கும் மனிதா
உனக்கா ஆறறிவு ...?!!
பெட்டியில் சுருண்டிடும்
பாம்பும், பணமும் ஒன்றே !
நஞ்சாய் மாறி உன்னை கொள்ளும்...!
பிறப்பது ஒருமுறை !
இருப்பது சில காலம்...!!
இடையில் எதற்கு இத்தனையும்!
மரணம் தொட்டாலும்-பிறர்
மனதில் நின்றிட வழி தேடு...!!