சுமை
வயிற்றில் இருக்கும் பொழுதுதாய்க்கு சுமை
ஐந்தில் பள்ளிச்சுமை
பதினைந்தில் பருவச்சுமை
இருபத்தைந்தில் வேலைச்சுமை
முப்பத்தைந்தில் பொருளாதாரச்சுமை
நாற்பத்தைந்தில் வாழ்க்கைச்சுமை
ஐம்பத்தைந்தில் வயதுச்சுமை
அறுபத்தைந்தில்
நாலு பேருக்கு சுமை
சுகமான வாழ்க்கை பாதையில்,
கழுதையைப்போல் எத்தனை தூக்கி செல்கின்றோம் சுமைகளை.