ஹிஜாப் எனது ஆடை

என் ஆடைமீது உனக்கேன் இந்தகோபாம்...
என் ஆடையில் நீகண்ட குறையை கூறு...
என் ஆடைமீது நீ கொண்ட ஐயங்கள் நூறு...
என் ஆடையில் பெண்ணுக்கு எது கேடு...

நீ கூறுகிறாய் என் ஆடை அடிமைத்தனம் என்று...
நீ அறியவில்லை என் ஆடையின் உண்மை என்னவென்று
நீ நினைவில்வை ஹிஜாப் என் அடையாளம் என்று
நீ அறிந்துகொள் என்னாடையின் மகத்துவம் என்ன வென்று

நான் தலைமூட பெருமை படுகிறேன் பெண்ணாக
நான் பாதுகாக்க படுகிறேன் இவ்வடை அணிகையிலே
நான் மதிக்க படுகிறேன் முகமூடி மறைவினிலே
நான் கௌரவிக்க படுகிறேன் அந்தரங்கள் மறைகைலே

சமூகமே அறிந்துகொள் நான் அணிகிறேன் எனக்காக
சமூகமே தெரிந்துகொள் முளுமையானேன் என்னாடையிலெ
சமூகமே உணர்ந்துகொள் நான் அடிமைஇல்லை
சமூகமே சொல்கிறேன் ஹிஜாப் என் உரிமை

என்னை அணிய வேண்டாம் என சொல்ல நீ யார்
என்னை கட்டுபடுத்தும் உரிமை உனக்களித்தது யார்
ஹிஜாப் எனுரிமை ஹிஜாப் என் வாழ்க்கை
நீ தடுத்த போதும் நான் அணிவேன் ஹிஜாப்

ஹிஜாப் அணியவேண்டாம் என நீ சொன்னால்
கெட்பதட்டு நான் அடிமையல்ல நான் சுகந்திரப்பெண்
நீ என்னை கல்லால் அடித்தலும் என் கால்கள் மடியாது
நீ என்னை தூக்கில் இட்டாலும் என் தலை உன்னை வணங்காது

(ஹிஜாப் என்பது முஸ்லிம் பெண்களின் ஆடை )
இது நான் கேட்டு ஓர் எழுத்து நண்பர் எழுதியது
அவருக்கு மனமார்ந்த நன்றிகள் ....

எழுதியவர் : ஓர் எழுத்து நண்பர் ....... (9-Feb-14, 1:04 pm)
பார்வை : 1000

மேலே