போங்கையா போங்கையா

வந்தமையா வந்தனம்
வந்த செனமெல்லம்
குந்தனும்,,,,,,,,,,,,,,,,

வருதாமையா வருதாம்!!!
தேர்தல் ஒன்னு !!!
வருவான் ஐயா வருவான்!!!
வருசையில் நின்னு!!!


எட்டி பாக்காத
எடமெல்லாம் -இனி
தட்டி கேப்பான் !!!

சட்டி தாளம்
போட்டு போட்டு
எட்டி பாப்பான்!!!

ஒட்டி துணியில்
ஒடுங்கின
மனிசனுக்கு!!!

எட்டு மொல
வேட்டி
வரும்!!!!

தாகத்து தண்ணி இல்ல
ஆனாலென்ன
தரமான குடம் ஒன்னு
தானா வரும்!!!

தாலி கூட தங்கமில்லை
ஆனாலென்ன
முட்டையில
மூக்குத்தி
மறைஞ்சி வரும்!!!!


வெட்ட வெளிச்சத்துல
குடுக்குறாங்க
லஞ்சம் ஒன்னு!!

அதுக்கும் பேரிருக்கு
அறிக்கையினு!!!!

இதெல்லாம் நீ
வாங்குவ வரிசையில்
நின்னு!!!

உனக்கும் இருக்குதா
மானம் ஒன்னு!!!


ஒத்த ரூவா உனக்கு
தரான் ஓசியில!!!

அதை பத்து மடங்கா
வாங்கிடுவான் உனக்கது
புரியல!!!

போங்கையா போங்கையா!!!

போய் புள்ள குட்டிங்கள
படிக்க வைங்கையா!!!!
அரசியல படிக்கவைங்கையா

அதிலிருந்தாவது
பொறக்கட்டும்
நல்ல அரசியல்!!!

நாட்டுல
நல்ல அரசியல்!!!

எழுதியவர் : நிலா மகள் (10-Feb-14, 4:06 pm)
பார்வை : 159

மேலே