காத்திருப்பு
மான் விழி மண் நோக்க....
தூண்டா மணி விளக்கில்...
என் வெட்கம் சிவந்திருக்க...!
பால் பழங்கள் உன்
பசியாறிட.....
பஞ்சனையில் இவள்
உனக்காய் தவித்திருக்க .....!
கை வளை கொஞ்சம்...
கேலியாய் சிரிக்கிறதோ...?
என் தனிமையின் தவிப்பை
கண்டு....!
கழுத்து அணிகலங்களும்....
என் வெப்ப மூச்சில் உருகி
தான் போய் விடுமோ.. ?
மல்லிகை தன் மோகம் கூட்ட..!
பிதற்றுகிறாள் பேதை இவள்....
ஏதும் அறியாமல்....
உன் கைகளுக்குள் காதலால்
கலந்திட..