பேச மட்டும் தெரிகிறது

இறுதிப் போரின்
தோல்வியைப் பார்க்கும் இதயத்திற்கு
முப்பது வருட
முத்தான வெற்றி தெரியவில்லை .....!

விடுதலைப் போராட்ட மூலமும்
மக்கள் ஆதரவுடனான ஈகமும்
லட்சக்கணக்கில் உயிரிழப்பும்
நிகரில்லா உணர்வும் தெரியவில்லை.!

ஒரு வீரக் குழுவை அடக்க
நாட்டுப் படை போதாதென்று
சர்வதேசமே திரண்டது
ஊனக் கண்ணுக்குத் தெரியவில்லை....!

தன் நாடு எண்ணில்லா ஆயுதத்தை
அளவற்ற ஆட்பலத்தை வழங்கி
பேரழிவுக்கு துணைபோனது
அறிந்தும் அறிய விரும்பவில்லை........!

எல்லாவற்றிலும் மௌனமாக
வேடிக்கை பார்த்துவிட்டு
`தோல்வி` பற்றிப் பேச மட்டும் தெரிகிறது
சிந்திக்கத் தெரியா முட்டாளாக...........!!!!
========================================

தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (11-Feb-14, 3:55 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 202

மேலே