உனக்கான என் கவிதை

யோசித்து யோசித்து சலித்துவிட்டேன்
உன் அன்பை கௌரவிப்பது
எப்படி என்று!!

கனவுகள் கூட கவிதைகளாய்
புலம்பெயர்கின்றன உன்னை
நினைக்கையில்!!

நேற்று தானே பார்த்து சிரித்தாய்
அதற்குள் நான்காறு மாதங்கள்
ஓடிவிட்டனவா??

"நண்பன்" என்ற ஒற்றை வார்த்தையில்
மொத்த உலகத்தையும் கட்டி
இழுத்துவிட்டேன்!!

கோபத்தை கூட அகிம்சை வழியில்
காட்டுபவன் ஏனடா அன்பை மட்டும்
அடாவடியாய் காட்டுகிறாய்??

என் நட்பு உலகத்தில் உன் பாத
சுவடுகளே எங்கும் நிரம்பி
கிடக்கின்றன!!

இந்நாள் மட்டும்மல்ல உன்னுடனான
என்நாளையும் பொன்நாளாகவே
கொண்டாட விரும்புகிறேன்!!

அண்டம் முழுவதும் தேடிப்பார்த்தேன்
என் அன்பை வெளிபடுத்த ஒரு வழி....
அண்டங்கலனைத்தும் கரைந்துவிட்டன
இன்னும் வழி கிடைத்தபாடில்லை
நண்பா!!

வெளிப்படுத்த தெரியாமலேயே
முடிக்கிறேன் நண்பா
என் கவிதையை...
நீயே உணர்ந்து கொள்வாய்
என்ற எதிர்பார்ப்பில்!!

எழுதியவர் : (11-Feb-14, 9:01 pm)
பார்வை : 304

மேலே