கொக்கிடம் கற்பாய்
அற்றைக் கிரை தேடி
ஆற்றங் கரை யோரம்
ஒற்றைக்கால் தவ மிருக்கும் !
உற்றமீன் வருகை கண்டு
பற்றிவிட எண்ணங் கொண்டு
ஒற்றன்போல் காத் திருந்து
சுற்றமுடன் அருகிற் சென்று
சிற்றலகால் கொத்திக் கவ்வி
சற்றும் கூட தாமதியாமல்
பெற்றஇரை கூடி உண்ணும் !
ஏற்ற வேளை வந்தவுடன்
குற்றமற செயல் புரிந்தால்
தோற்காமல் வினை முடியும்
வெற்றிநமை நாடி வரும்
போற்றியுனை ஊர் மெச்சும்
கற்பாய் பாடம் கொக்கிடமே ....!!