தாயின் புலம்பல்

அம்மா அம்மா என்று நீ அழும் ஓலி
இரு கை கொண்டு என் இதயத்தை பிசயுதடி

உனக்காகவே நான் ஓடி உழைக்கிறேன்
நீயோ என்னை நினைத்தே இளைகிறாய்

குறத்தி தாய் கூட குழந்தையை
தோளில் தொட்டில் கட்டி தூக்கி போகிறாள்

என் கண்ணே அந்த பாக்கியம் கூட இந்த
அபாகியவதிக்கு இல்லையடி

உழைத்து களைத்து வீடு சேர்ந்தால்
உன்னை பற்றி குற்ற பத்திரிகை வாசிக்கிறார்
உன் பாட்டி

உனக்காகவே உன் தாய்
உன்னை விட்டு போவதை நீ
புரிந்து கொள்வது எப்போது

கால சூலிநிலையில் உன் முன்னே
கைதியாக நிற்கிறேன்
மன்னிப்பாய என் மகளே

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (12-Feb-14, 9:20 am)
Tanglish : thaayin pulambal
பார்வை : 389

மேலே