காதலர் தின பூவே
கதகதப்பாய் கொஞ்சம்
வெதுவெதுப்பாய்
பற்றிக் கொண்டிருக்கிறது
காதல் தீ...
கொழுந்தாக பின்
தணலாக சூடேறி
நரப்புகளை வீணையாக
மீட்டிக் கொண்டிருக்கிறது...
இதமாகி பின்
பதமாகி அரவணைப்பில்
அடங்கிப் போய்
பூனைக்குட்டியாய்
பதுங்கிப் போகிறது...
கோபங்கள் வெகுண்டெழுந்த
நேரங்கள் கிழிக்கப்பட்ட
நாட்காட்டியாய் தினம்
கரைந்து போகிறது...
அணல் தெரிக்கும் வசனங்கள்
அடித் தொண்டையை விட்டு
வெளியேற மறுத்து
அடம் பிடிக்கிறது..
என்றோ
நீ தந்த முத்தப் பூக்கள்
தினம் பூத்துக் குலுங்கி
கொண்டேயிருக்கிறது...
காதலர் தினத்திற்கும்
அந்தப் பூவே
தருவாய் என்று இன்னும்
தவமிருக்கிறேன்...
அன்பே நீ வருவாயா
அள்ளி அள்ளித் தருவாயா என்
இதழ்ப் பூக்கள் கசங்காமல்...!