பட்ட மரம்

பட்ட மரம்.

பட்ட மரம் ஒண்ணு
வெட்ட வெளி நிண்ணு
சொட்டும் பனி உண்ணு-பாவம்
சொருகுதம்மா கண்ணு.

கூடு கட்டத் தேடி
ஓடி வந்த கூட்டம்`
வாடும் போது காணோம்-இது
வாழ்க்கை தந்த பாடம்.

நிழல் தந்தா கூடும்.
இலை உதிர்ந்தா ஓடும்.
பழம் கனிஞ்சா தேடும்.-இது
பயன் அடைஞ்ச பாடம்.

வரவி ருந்தால் உறவு
வலுவி ழந்தால் தெருவு.
பசை காஞ்ச பிறகு-இது
பாடை ஏறும் விறகு.

சொந்த முண்ணு சொல்ல
எந்த வொண்ணும் இல்ல.
எழுதி வச்சேன் எழுத்து –இது
பழு தறியா கருத்து.

கொ..பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (12-Feb-14, 9:24 pm)
Tanglish : patta maram
பார்வை : 1179

மேலே