விதவை

தொட்டவன் ...
பட்டுப்போனதால்...
வர்ணங்கள் கெட்டுப்போன .....
வெளிர் வானவில் .....
வண்ணங்கள் ....
கலைந்த பின்னும் ....
வாழத்துடிக்கும் ....
வெண்ணிற பட்டாம்பூச்சி ......
விதவை பட்டத்துக்கு ....
நாணேற்றி ....
வாழ்க்கை வானில் பறக்கவிடும் ....
விசித்திர சிறுமி .....
சமுதாய வசைகளை ....
இசையாய் நினைத்து ....
ரசிக்க கற்றுக்கொண்ட ...
நவீன சரஸ்வதி .....
காம நரிகளின் ....
ஈன ஊளைகளுக்கு...
உஷ்ண விழிகளால் ....
உலை வைக்கும் ....
உன்னத பிறவி ....
தூரிகை தொலைந்த பின்னும் ......
தொலைந்தவன் உருவை ...
தினம் ...தினம் ....
உயிரில் வடிக்கும் .....
சரித்திர நாயகி ....